வியாழன் கவிதை

வாழ்வில் கலையும் தொடரா நிலையும்..

சிவதர்சனி இரா

வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்..!!

மண்வளம் காக்கும் கலை
மன நலம் போற்றும் நிலை
உயிரில் உணர்வில் கலக்கும்
உறவாகி உயிர்ப்பாகி நிறையும்..

பாட்டும் நடனமும் பலகலை
பண்பட்ட வாழ்வின் உயிர் நிலை
புண்பட்ட மனத்தினை ஆற்றுப்படுத்த
புகழாரம் சூடும் கலையதுவே..

இசைந்து வாழத்தலைப்படும்
இறைவன் விருப்பை உறவாக்கும்
நிறைந்தே மந்னிடம் வாழ்வேற்ற
நித்திய மகிழ்வே கலையாகும்..

இளமை மனத்தில் பதியமாகி
முதுமை வரைத் துணையாகி
வறுமை போக்கும் வரமாகி
வல்லமை கூட்டும் கலையதுவே..

புலம்பெயர் தேசத்தில் நின்றே
புலமை விலக்கி போட்டி ஈன்று
புகழுக்கும் பெருமைக்கும் துணை
புலன் இழந்து புரியா நிலை..

பணத்தினை வாரி இறைத்தும்
பலமணி நேரம் இழந்தும்
சந்ததி விலக்கியே வாழ்ந்திடுதே
கலை தொடரா நிலையதுவே..
சிவதர்சனி இராகவன்
6/2/2025