எனது விருப்புக் கவிதை..
அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை இல்லை.
சுற்றாத மரங்கள் இல்லை. கொட்டாத பணங்கள் இல்லை. இன்னும் அம்மா என்ற வார்த்தைக்கு நான் காத்திருக்கின்றேன்.
இன்ப துன்பத்தில் வீட்டுக்கு அழைப்பர் தள்ளி வைத்து வேடிக்கை பார்ப்பர், எதுவும் கைபட்டால், மலடி என்பர். முகம் சுளித்து வாட வைப்பார் இரக்கம் இல்லா வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பார். புன்னகை பூத்தும் வதை சொற்களால் வதைப்பர். நாலு சிவ ருக்குள் இருந்தது வாழ்க்கை, எதுவும் பிடிப்ப ற்றது இல்லற வாழ்க்கை. கை பிடித்தவன் தூர விலகினான், உற்றமும் சுத்தமும் வேடிக்கை பார்த்தது. எனக்காக யாரும் இல்லை என்று, என்னை கொன்றது! என் கண்ணீரை துடைக்க இருகரம் இல்லை, என யாசிக்கத் தொடங்கினேன். அன்று கண்ணில் பட்டது, குழந்தைகள் நிழலாடி, விளையாடும், ஆச்சிரமம் . அம்மா என்று அமுதமொழி கேட்டது . ஏறினேன் படி சிசுவை ஏந்தினேன் அமுதூட்டி னேன், அரவணைத்தேன், பெற்ற தான் பிள்ளையா? சுமந்தால் தான் பிள்ளையா? என் துன்பத்துக்கு முடிவு பிறந்தது, எனக்காக ஒரு ஜீவன்……. மண்ணில் காத்திருக்க
ம……
வதனி தயாபரன்