சந்தம் சிந்தும் கவிதை

வதனி தயாபரன்

அந்திவானம் சிவந்திருக்க, உலகம் உயிர்த்தெழும்ப, களிப்பிற்கும் மாந்தரை, கவி பாடி செல்வோம? இசையில் நனைந்தபடி, பசுமையில் கால் பதிக்க, உழவன் உழ த்தியின் குரல் கேட்க, வானுயர்ந்த மரத்தில் நிழல் ஆட, பறவைகளின் ரீங்காரம் தாளமுட, கவி பாடி செல்வோமா? கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, பாடும் மீன்கள் சதிராட, படகோட்டி தொழில் செல்ல, கண்ணீர் தழும்பிய பாவைகள் வழி அனுப்ப , கவி பாடி செல்வோமா? வானுயர்ந்த கோபுரத்தில். மணியோசை எங்கும் ஒலிக்க, பார்ப்பனர்கள் துதி பாட, கவி பாடி செல்வோமா? கொஞ்சம் மழலைகளும், கட்டிலும் காளைகளும், காதல் கொள்ளும் மங்கை ஆளும், சந்ததியால் வாழ்ந்த ஊரில், நடை பயின்றபடி, கவி பாடி செல்வோமா? வீரம் சொரிந்த மண்ணில், இரத்தம் சிந்திய வ டுக்கலை நினைவு கூர்ந்து, உலகம் போற்றிய வீரனும், அவன் வளர்த்த குழந்தைகளையும், தொழுதுவிட்டு, கவி பாடி செல்வோம்?
வதனி தயாபரன்