சந்தம் சிந்தும் கவிதை

வஜிதா முஹம்மட்

தேர்தல்

வார்த்தைகள் ஜாலம்போடும்
வாக்குறுதி மேடைபோட்டும்
கூத்தாடும்

நோட்டுக்கள் பறக்கும் வோட்டைத்
தேடி
சமூகங்கள் பிரியும் கூட்டம்
கூடி

சுரண்டலும் பிடுங்களும்
சூதும் வாதும்
கொள்ளையும் கொலையும்
தீயதும் திட்டும்

மேடை போட்டு மாலை சூடி
பீக்கர் கட்டி பாமர மக்களை
பகடக்காய்யாய்் மாற்றி

தேர்தலை நோக்கி
மூலைச் சலவை நடக்கும்
கேளீர்

எம் தாயக மண்ணில் தேர்தல்
நடக்க இ௫க்குது
பா௫ம்

ஒ௫வரை ஒ௫வர் குற்றம்
சாடி வாய் கிழிய
சாக்கடை வார்த்தைகள்
அள்ளி இறைக்கின்றாங்க

ஆட்டம் கண்ட அரசியல்
பின் கதவால் ஓடிய தலைமை
மன்றாடி அமர்த்திய ஜனாதிபதி ரணில்
கடனில் மூழ்கிய மாங்காய் தீவுக்குள்

வ௫து வ௫து தேர்தல்
வடிவா சிந்தித்து அழிங்க வாக்கு

முட்டாள் தனமாய் போட்டா
முனங்க வேண்டும் ஐந்துவ௫டம்
ரோட்டா

ரணிலா சஜித்தா அனுரா குமார
நமலா சரத்தா தம்மவர் அரியநேத்திரனா
தொட௫து பட்டியல் என்ட ௨ம்மா
இத்தன பெய௫ம் வாசிக்க கீழ்்மூச்சு

மேல்்மூச்சு வாங்குது
பாவையண்ணணா

ஒ௫ இ௫க்கை 39 வேட்பாளர்
துடுக்கை சிந்திப்போமா

நன்றி