சந்தம் சிந்தும் கவிதை

வஜிதா முஹம்மட்

வலி

ஊமைக் காயத்தின்
உணர்வுகளின் ஈரம்

சாம்பல் பூத்த வேதனைகள்
விழி கக்கும் பாரம்

நினைவுகள் சுரக்கும்
௨றுதிகள் இழக்கும்
நேரம்

இதயம் ௨டையும்
நினைவு ஆட்டும்
விலகிச் செல்லா சுமை
வாட்டும்

காயத் தழும்பு தெரியா
வேதனை
தூக்கி எறிய முடியாத
சோதனை

வலிதாங்கா இயற்கை
சீற்றத்தால் சீறும்

வாய் பேசா ௨யிரினமும்
வலி வந்தால்
கோபத்தால் வெடிக்கும்

நா கொடுக்கும் வலி
நம்மைை அறிதாத எறி

௨ணர்வோடு ௨றவாடி
௨ள்ளத்தால் ௨ள்ளாகி

௨டலோடு சங்கமித்து
விழிகளை வடிகாலாக்கி
வேதனையை வெளிக்காட்டும்
வலி