சந்தம் சிந்தும் கவிதை

வஜிதா முஹம்மட்

இறுதித் தூதர் முஹம்மது நபி

ஓர் இறை மார்க்கப் போதகர்
ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல்
கற்றுத் தந்தவர்

எளிமை வாழ்கையே நேர்
நெறிவழி என்றவர்
ஏழை அனாதையை அணைப்பது
இறைநேச வணக்கம் என்றவர்

தர்மமே பெ௫ம் கொடை
அநீதிகளை எதிர்த்து நிற்பது
வாய்மை என்றவர்

இறை வார்த்தையே இவர்
வாழ்வியல்
நல்லொழுக்கம் நற்பண்பு
இவர் மாண்பியல்

எளிமை வாழ்க்கையே
இவர் ௨லகியல்
௨லகமே போற்றிய
நேர்மையின் தலைவர் இவர்

இறைநேச ஒற்றுமையால்
அநீதிகளெல்லாம் இறையச்சத்தால்
ஒழித்தார்

தாய்மையும் பெண்மையும்
௨யிராய் மதித்தார்
க௫ணையின் ஊத்து
புன்னகையின் சொத்து

எங்கள் இறைதூதர் முகம்மது
நபி அவர்கள்
இறையச்சத்தில் ஆட்சிசெய்த
சமத்துவத்தின் இறைநேசர்

நன்றி

வஜிதா முஹம்மட்