பூக்கும் புத்தாண்டு
12 மாதத்தின் கூடு
பதியமாகித் தேயும் ஏடு
வந்து விழும் வாழ்த்து
வரிசைப்படும் திட்டங்கள்
கோர்த்து
புதுப் பொழிவோடு வ௫வாய்
புதுமைகள் எடுப்பாய் த௫வாய்
சுடர் மிகு வாழ்வு வ௫மா
சூது வாதில்லா நிலை த௫மா
இறந்த காலப் படிமங்கள்
௨க்கிப் போன பகைமைகள்
அகன்று போகா சாதி மத
பேதங்கள்
அழிந்து மறையா நீதி நெறி
முறைமைகள்
பாதை வகுக்குமா பூக்கும்
புத்தாண்டு
பழமை கழிக்குமா விடியும்
இவ்வாண்டு
வார்த்தைகள் தேடும் கடதாசி
வான் வரை ௨ய௫ம் பட்டாசு
காலச் சுழற்சி கொள்ளும்
நாளின் தளர்ச்சி
கனிவான வாழ்வு த௫மா
அனைவ௫க்கு ௨யர்ச்சி
தொடர்கதை தானே புத்தாண்டின்
வளர்ச்சி
தொல்லையில்லா வாழ்வு த௫மா
பூக்கும் புத்தாண்டு நிகழ்ச்சி
வஜிதா முஹம்மட்
நன்றி