சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்…
அழகிய புள்ளியின் தொடக்கமே
ஆகுமே வளர்ச்சியின் மிடுக்குடன்
வெகுமதி நிறைந்த அடுக்கிலே
வெற்றியின் சாசனப்பதிவிலே
அகரம் பதித்த பள்ளிக் காலம்
அடுத்து தொடரும் கல்வி ஞானம்
நட்பின் ஒற்றுமை பெருகுமே
நம்பிக்கை நிறைந்து வளருமே
மேன்மை நிலையில் படிப்பும்
மெல்லெனத் தொடரும் விளையாட்டும்
கள்ளமே அற்ற நட்பின் வலுவும்
கணதி குன்றிய வாழ்வின் வனப்பும்
எங்கெனக் கிட்டும் இனிதே எமக்கு

பறவைகள் போல பாடித் திரிந்தோம்
பாசச் சிறகில் இணைந்து மகிழ்ந்தோம்
நாளும் பொழுதும் நன்றாய் மலர
மாணவப் பருவம் மகிழ்வின் எல்லை
மறக்கக் தகுமா பள்ளிக்காலம்
ஏற்றமிகுந்த செயல்களும்
ஏணியாய் ஏற்றியோர் தியாகமும்
வரமாய் கிட்டிய வசந்தமே
உரமாய் உரக்கச் சொல்லும் பருவமே
பள்ளிக்காலப் பரீட்சையில்
பாடுகள் நிறைக்கும் அச்சமே
உயர்வின் ஏடுகள் எமக்கு உச்சமே
இன்றும் எமக்குள் எரியும் விளக்கியது
ஏற்றிப் போற்றல் நன்றியே!
நன்றி