“வழிகாட்டி”
வழிகாட்டி என்றிடும் வாய்ப்பிற்குள் பலராய்
வலம் வந்து சிந்தையினை தட்டுகிறார் பலமாய்
உலகிலே எமை ஈன்ற தாய் தந்தை முதலாய்
உரித்ததாகும் வாழ்விற்குள் பலராவர்-உறவாய்
வாய்ப்புக்கள் பலநூறு வாசலினைத் தட்டும்
வருங்கால முன்னேற்றம் எண்ணமாய்ச் சுற்றும்
பயமறியா கன்றுபோல் பருவங்கள் கரையும்
உய்த்தறியா சிந்தைகள் உபாதையிலே முடியும்
அனுதினமும் நாம் வாழும் வாழ்க்கையின் புரட்சி
எத்தனையோ செதுக்களின் உளியாற்றும் உயர்ச்சி
அயராத பணிக்குள்ளே எத்தனையோ பேர்கள்
ஆக்கிநிற்கும் வழிகாட்டல் வாழ்க்கையின் வேர்கள்
ஒற்றைக்கால் தூக்கிநிற்கும் கொக்குப் போல் நாங்கள்
உறுமீன்கள் வரும்வரையும் காத்திருத்தல் முறையா?
வழிகாட்டி தந்தோரின் வழிமுறையை பற்றி
வழிகாட்டி வாழ்வோமே வரைமுறையை ஆக்கி!
நன்றி