வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

அகிம்சைக்கு அகவை முப்பத்தி…

ஆழமான கருவோடு ஆயுத்தின் வலுவோடு
போராடும் தேசத்தின் புதுப்பாதை பயணிக்க
உயிரான தியாகத்தை உருக்குலைந்திடும் வாழ்வினை
அகிம்சையின் நெறியாக்கி அறப்போரின் வலுவாக்கி
பயணித்த வீரனே பாறை சாற்றிய தோழனே

மரணித்து ஆண்டுகள் முப்பத்தியாறா
மறுக்கிறது மனது நினைக்கிறது நினைவு
நேற்று நீ எம்மோடு நல்லூரின் வீதியில்
ஈர் ஆறு தினங்கள் இருந்ததாய் உணர்வோடு
ஈழத்தின் மீட்பிற்காய் வேரான வேங்கையே

அடிமை வாழ்வும் அந்நியப் படையும்
அகற்றிட வேண்டியே அறைகூவல் விடுத்தாய்
ஐந்தம்சக் கோரிக்கை எமக்கெனத் தொடுத்தாய்
உயிரையே எமக்கெனத் தியாகமாய் எரித்தாய்

உண்ணா நோன்பாலே உலகையே அழைத்தாய்
விடுதலை வேட்கையே வெற்றியாய் கொண்டாய்
அறப்போரின் வழியிலே அகிம்சையை வென்றாய்
அண்ணல்தீலிபனே,
வீரத்தின் முழக்கம் விண்ணெங்கும் அதிர
காலத்தை வென்றிட்ட காவிய மைந்தா
ஆண்டுகள் முப்பத்திமூன்று அகிம்சையின் தியாகமே
ஈழத்தின் இதயமாய் துடிக்குது நினைவு
நல்லூர் முன்றலில் ஈராறு பொழுது.
நன்றி மிக்க நன்றி