வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

தியாகமே தீர்ப்பானதா?
அன்னை தேசத்து அண்ணல் காந்தி
அகிம்சை வழியின் போரினவாதி
உண்ணா நோன்பின் உலகப்படிமம்
உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம்

பிரகாச ஒளியின் பிம்பச் சுடரே
எமக்கென ஏற்றிய தியாக தீபம்
மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம்
கண்ணின் திரையில் கடலெனப் பொங்கும்

மண்ணின் மைந்தா அகிம்சை வேந்தா
ஈரறு தினத்தின் ஈகைச்சுடரே
ஈழவேரின் வேட்கைத் தீயே
ஆகுதியானாய் அன்னை மண்ணில்

அகிம்சைப் போரில் உரிமை பூண்டாய்
அண்ணல் தீலிபனே ஆகுதி மைந்தனே
தியாகமே உமக்குத் தீர்ப்பானதா
தாயக மீட்பின் தாகமாய் தாங்கி
தமிழுக்கு உயிரை ஈர்த்திட்ட வள்ளல்
ஈராறு தினங்கள் இலக்கில் வென்றாய்
வீரத்தின் வேட்கை வெற்றியாய்
சுமந்து
காலத்தில் எமக்கு கலங்கரை நீவிர்
ஞாலத்தில் தியாகமே தீர்ப்பான
வேள்வி
அகிம்சைப் போரின் ஆகுதி ஞானி!
நன்றி