வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வெறுமை போக்கும் பசுமை…
தரணி விரிப்பாய் பசுமை
தாங்கும் உயிர்களின் உடமை
உலகைக் காக்கும் உயிர்ப்பு
அழகுக் கோல வனப்பு

அழித்தல் நிறைந்தால் அவலம்
இயற்கை வளமே குன்றும்
இல்லாதொழியும் பசுமை
வெறுமை படரும் நிலமை

மனிதம் செய்த மடமை
மாசுபடுமே சூழல்
மரங்கள் அழிப்பு கொடுமை
மண்ணின் அரிப்பு தொடரும்
கடலே நிலத்தை நிறைக்கும்
மழையின் வளமும் குன்றும்
பசுமை மெல்லக் கரைந்து
பயிர்கள் வளமும் அழிந்து
வெறுமை உலகை வெல்லும்
வெந்தணலில் அகமே வேகும்.

பசுமை விரும்பும் உயர்வே
பாரைக் காக்கும் திண்ணம்
மரங்கள் நாட்டி வளர்ப்போம்
மாற்றும் உலகே ஜெயிக்கும்!
நன்றி