வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பாரம்பரியமே..
தொன்மைக்கு புடமிடும்
தொடர்வாழ்விற்கு வழியிடும்
வழிகாட்டல் தொடராகும்
வரலாறு பதிவாகும்

ஆதியின் முதற்குடியாய்
அடித்தளத் தமிழ்க்குடி
பாரம்பரியத்தின் விதைப்பிடல்
பண்பாட்டு பகிர்வுகள்
விழுமியத்தின் வேராகும்
வீறுகொள் வாழ்வாகும்
காலத்தின் சுழற்சியில்
கருக்கொள் சிந்தையில்
பாரம்பரியமே பண்பாட்டு வேதம்
தலைமுறை தாங்கும் தனித்துவ
கீதம்.
நாளைய உலகில் நம்பிக்கை வாழும்.!.
நன்றி..
மிக்க நன்றி