வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வாழ்வியல் கலை தொடரா நிலை....

வாழ்வியல் கலை
தொடரா நிலை….
வாழ்வியல் கலையே வற்றாத பொய்கை
வரலாறு செப்பும் தமிழரின் தொன்மை
நாட்டுபுறத்தின் கலைகளின் கூற்று
வீரத்தின் உணர்வும் வினைத்திறனும்
கலைகளின் கூட்டும் கச்சேரி வடிவும்
காவடி கரகம் கும்மி கோலாட்டம்
பற்பல பழமை ஆற்றலில் குன்றி
ஆளுமை சிதைந்து போற்றலின்றி
போகுதே கலைகள் ஈட்டம் காணும்
இன்றைய நிலையேன்
பழமையின் பாடுகள் அறியா வாழ்வா
கலைகளின் தொன்மை துலங்கா வரமா
மனதின் மதிப்பை இசையின் திறனை
மகிழ்ச்சி நிறைவை காத்திடமாக காக்கும்
மரபு போக்கிடமின்றி புதைந்து சிதையுது
வேரினமின்றி வேற்றுமையாகுது.
நன்றி.