கவியழகு…
சொல்லோடு நயமும்
கவியோடும் கருவும்
கலந்தோடும் அருவி
எதுகையும் மோனையும் எழில் கொஞ்சும் அழகு
ஈர்க்கின்ற நயமே
இதயத்தின் விழிப்பு
காதலின் ரசமும்
கவிதைக்குள் கலப்பு
உவமைகள் கலக்கும்
அணிகளும் சேரும்
கவியழகு மயக்கம் காசினியே வியக்கும்
கருப்பொருளின் எழிலே
கவி வீச்சின் உச்சம்.
நன்றி மிக்க நன்றி