மொழியும் கவியும்…
கவிக்குள் கருவாய் உருவாகும்
காத்திடம் மிக்கத் தமிழாகும்
காசினி முதன்மை பிரசவம்
குமரியில் உதய தரிசனம்
உலகின் முதன்மை முத்திது
முதல்மொழியாகிய தமிழிது
இலக்கிய இலக்கண நயத்திலே
இயல் இசை நாடகக் கலப்பிலே
முத்தமிழ் மகுடத்தில் மூத்ததமிழ்
கவியெனும் கனிரச வார்ப்பிலே
எதுகையும் மோனையும் உறவாடும்
புதுக் கவி வானே சிறகாகும்
எண்ணச் சிறக்கிற்குள் வசப்பட்டு
எதிலும் கருத்தினை நயமாக்கி
வசப்படும் அகத்திலே வார்ப்பாகும்
மொழியே எம்மைத் தாலாட்டும்
நவரசம் நயம்படக் கவியாகும்
நம்தமிழ் நல்மொழிக் காவியமே!
நன்றி மிக்க நன்றி