கவலை….
காயத்தை கத்தரிக்கும்
கணதியை விளைவாக்கும்
மறதியை மளுங்கடிக்கும்
மாயத்தின் தோற்றம்
உபாதையின் உள்ளீடு
உள்ளத்தின் உருக்குலைவு
காட்டாற்று வெள்ளமாய்
கரையற்றுப் பாயும்
கரையானின் புற்றாய்
கவலையே கொல்லும்
முளையிலே வெட்டு
முன்னேற்றும் விளையும்
அறிவாலே ஆளு
அதிகாரம் தணியும்
முயற்சியைத் தூண்டு
முன்னேற்றம் நிகழும்
வருவதை எதிர்கொள்
வழிகளே செப்பும்
கவலைக்கு மருந்து
கடுகதி வாழ்வும்
அயராத உழைப்பும்
அகத்தினை தீட்டும்
அனுதின ஆற்றலும்
முயல்தலே முனைவு.
நன்றி