எதிர்ப்பு அலை….
தாயகநிலத்தின் தள்ளாட்டம்
தாங்கொணத்துயரே அன்றாடம்
வீழ்தலில் வாழ்வே போராட்டம்
எழுதலில் இல்லை முன்னேற்றம்
வாக்குகள் போட்டு தேர்வு செய்து
வளமாய் நாட்டை ஆளவைத்தோம்
வறுமைநிலைக்குள் திண்டாடும்
வரட்சிநிலமாய் புரட்சி செய்த
அரசு ஆட்சியின் எதிர்ப்பு அலை
ஆளும்கட்சியின் மதியின் விலை
மீளுமா தேசம் மிடுக்குடன்
வாழுமா இலங்கை வளத்துடன்
நன்றி மிக்கநன்றி