சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பூக்கும் புத்தாண்டே…
நல்வாய்ப்பின் அரணோடு
நாள் வளர்ச்சித் திறனோடு
விடியல் தரும் யுகமாக
வென்றுயரும் புத்தாண்டே
மங்களத்தின் வாத்தியங்கள் மத்தாப்பு ஒளிகீற்றும்
தங்குதடை ஏதுமின்றி
தைரியத்தின் மிடுக்கோடு
எங்கும் எழில் பூத்திருக்கும்
எண்ணத்தின் ஏறுமுகப்
புத்தாண்டே புவி வருக!
புதுயுகமாய் நீ மலர்க!

வளர்ச்சி நிறை வரலாறு
வானுயர்ந்த புதுயுகமாய் நீ மலர்கவே!
வற்றாத கொடை வளங்கள்
கல்வி நிலை கைங்கரியம்
கற்றலில் ஓங்குபுகழ்
நித்திலமே வென்றுயர்க புத்தாண்டாய் பூத்தெழுக!

தெவிட்டாத தேனமுதாய் தேசமெங்கும் நிறைவளங்கள்
தொழில்நுட்ப வளர்முகமாய் வருக புத்தாண்டே
வானுயர்க நின்புகழே! சான்றுரைத்து சாலவும் சிறப்பெழுது புத்தாண்டே புதுயுகத்து புரட்சியிலே வளர்கவே!
நன்றி
வசந்தா ஜெகதீசன்