சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பனிப்பூ …
தூவு துகள்களாய் வீழ்ந்து குவிந்தது
தூரமெங்குமே வெள்ளை படர்ந்தது
அழகுப் புவியாய் அகத்தைக் கவர்ந்தது
அவனியெங்குமே பனிப்பூ நிறைந்தது

பாலர் கூடியே பனிப் பாவை ஆக்குவர்
பனியில் சறுக்கியே பாலர் மகிழுவர்
பூம்பனியின் லீலையில் பூக்கும் பரவசம்
கால மகிழ்விலே கரைந்து விலகுமே

உள்ளக்கமலமும் வெள்ளை நிறையுமா
உருகு பனியாய் அன்பில் குழையுமா
மனித நேயம் மன்றில் நிறையுமா
மனதின் நெருடல் மறைந்து விலகுமா

பனியின் படர்வில் பாரே அழகு
உராயும் அகத்தில் உண்மை நிறைவு.
நன்றி
மிக்க நன்றி