உயிர்க்கொடை…
வரலாற்று நாயகர்கள்
வலி சுமந்த காவியங்கள்
ஈழத்தின் வேங்கைகள்
இமயத்தின் இலக்குகள்
ஈகையின் தற்கொடைகள்
காலத்தின் கலங்கரைகள்
தமிழீழ மீட்பிற்காய்
தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார்
சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள்
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
தியாகத்தின் தீபங்கள்
விடுதலைக்காய் வித்தானோர்
உயிர்கொடையின்
உறவிவர்கள்.
கார்த்திகையின் காவியர்கள்.
ஈழத்தின் இமயங்கள்
ஈகையின் வேரிவர்கள்.
நன்றி
மிக்க நன்றி