மாற்றம்..
நாட்காட்டி நலிகிறது
நாளுமாய் மெலிகிறது
மாற்றத்தை உரைக்கிறது
மறுதலிப்பாய் விழிக்கிறது
நேற்று என்று ஓர்தினம்
நாளை என்று மறுதினம்
ஓடி மறையும் வேளைக்குள்
மாற்றமே மறுமுகம்
விரைகின்ற கடுகதியில்
வினைத்திறன்கள் ஏராளம்
மாற்றத்தின் திறவுகோலே
மதிநுட்ப உலகாகும்!
நன்றி