சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சக்தி கொடு…..
வாழ்வுறு அச்சின் வரம்பிது
வரையறை செப்பிடும் வரமிது
ஆட்பலம் குன்றா அருள்சக்தி
ஆதி உலகின் தாய் சக்தி
நவமது நாட்களின் வழிபாடு
முச்சக்திகள் கூட்டின் நிலைப்பாடு
உலகின் உந்துசக்தியாய்
உருளும் வாழ்வின் மெய்ப்பாடே
சக்தி குன்றா சமன்பாடு
சாதிக்கும் வாழ்வின் பிரகாசம்
சக்தி மயமே உலகாகும்.

நன்றி மிக்க நன்றி