வெற்றிப்பயணம்..
வளர்ச்சிப்படிகள் ஏணியிடும்
வற்றாச்சுரங்கமாய் வலுவமைக்கும்
அறிவியல் ஆற்றல் அரணமைக்கும்
அதிசய உலகே வசமாகும்
தாழ்வும் உயர்வும் தகுந்த படி
தர்க்கம் புரிதலே
வாழ்வின் வழி
பட்டே அறிந்து பயனாக்கி
பட்டறிவாகி நிமிர்ந்தெழுவோம்
உயர்வின் வலுவே
வெற்றிப்படி
வெற்றிப்பயணம் நோக்கி நகர்
விடியல் விளக்கே
அறிவின் சுடர்
வேகம் விவேகம்
உழைத்து உயர்!
நன்றி
மிக்க நன்றி