சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வழிகாட்டி“
ஆற்றல் கொள்ளும் அவனி வாழ்வு முழுமையாகுமா?
அனுபவத்தின் ஆய்வுகள் தான் பாடமாகுமா?
தோற்றும் போகும் வாழ்க்கை நிலை தோல்விக்கூடமா?
வெற்றி பெற்ற வாழ்க்கை என்ன உலகப்பாடமா?

சுற்றும் உலகக் கதவிற்குள்ளே எத்தனை பாதை
சுதந்திரத்தின் பாதையிலே எத்தனை சாலை
இயந்திரத்தின் பயணத்திலே எங்களின் வாழ்க்கை
இருபக்க நாணயம் போல் சுற்றுது உலகை

செதுக்கும் உளி தாங்கிடுமே எத்தனை வலியை
சிலை கூடி செதுக்கும் வரை சிதைக்கிறதே தன்னை
சிலந்தி வலைப் பின்னல் கூடி சீர் நிலையின் எல்லை
சீரழியும் வாழ்க்கைநெறி மதியற்ற தன்மை

வெற்றி கொண்ட வாழ்வில் எல்லாம் தோல்வியே எல்லை
அன்பு கொண்டு அடைக்கலமாய் அரணமைப்பார் வாழ்வை
ஆக்கி வைக்கும் ஆற்றல்த்திறன் அறிவுரைவின் பிள்ளை
ஆணிவேராய் வழிகாட்டி அவனி வாழ்வை வெல்வீர். நன்றி