சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நீங்காத நினைவுகள்–
ஊற்றெடுக்கும் உள்ளகத்து நினைவுகளின் கோர்ப்பு
உராய்ந்தெழுதும் உளி போல சிலை பதிக்கும் வார்ப்பு
நாற்றெடுத்து நட்டு வைக்கும் நல்விருட்சக் கனவு
நாளாந்த மீட்டுதலில் நம்பிக்கையின் நிலவு
வடம் பிடித்து இழுத்துவரும் வாழ்க்கையெனும் தேரில்
நீங்காத நினைவுகளே நிதம் உலாவும் மனதில்
தாயின் மடி சுகம்கோதும் குஞ்சுகளின் புரட்சியிலே
தந்தை அகப்பந்தலிலே நம்பிக்கையின் எழுச்சி
சொந்தங்களின் படர்வினிலே நட்சத்திர மின்னல்
சுதந்திரமாய் ஊற்றெடுக்கும் வாழ்க்கை என்னும் விடியல்
அலைமோதும் கடல் போல அசைந்தாடி உறையும்
உணவாக்கும் உப்பாகி உள்ளகத்தில் பதியும்
ஐம்புலனின் அடகத்தில் ஆழ்ந்து விடும் சிந்தை
ஆழ்கடலின் முத்தாகி சிப்பிக்குள் உறையும்
ஞாபகத்தின் நல்லுறவே தந்தை
நீங்காத நினைவுத்தடம் ஒவியமாய் பதியும்
தூங்காத விழிக்குள்ளே துளிர்த்து வளம் பெருகும்.
காவியத்து கருங்கல்லே காலம் எல்லாம் வாழ்-நீ
பாசமெனும் பெரும் சொத்தே தந்தை முதலெழுத்தின் முத்திரையே எந்தை! மிக்கநன்றி
வசந்தா ஜெகதீசன்.