வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

அடையாளம்....

அடையாளம்….
மொழியும் இனமும் முகவரியே
முழுமதியாய் தாங்கும் அனுமதியே
வேராய் நிலைகொள் விருட்சமென
விளைந்திட்ட நிலமே உரித்தாகும்
சுதந்திர சுவாசத்தின்
இருப்பிடமே
போரின் வதையில்
புதையுண்டோம்
சுக்குநூறாய் உடைந்திட்டோம்
சொந்தமண் இழந்திட்டோம்
எண்ணற்ற தியாகத்தின் வேள்வி
நிலம் விட்டகலும் நிர்க்கதி வாழ்வு
வேற்றகத்து வாழ்வில் வீழ்கின்ற
நிலையானோம்
அடையாளம் அற்றதாய் ஆர்ப்பரித்து வீழ்ந்தோம்
அவலத்தின் நிலையிலே நாடோடி வாழ்வு
உயிர் தன்னைக் காக்கவே
ஊரெல்லாம் அலைவு
அகதியின் வாழ்வாய் ஆங்காங்கே பிரிவு
அடையாளம் எமக்காகும் ஏதிலி உலகு
அடைக்கலம் தந்திட்ட தேசமே நிமிர்வு
நன்றியின் உரித்திலே நம்மொழி உயர்வு
தமிழினப் பற்றே தகமையின் ஏற்பு
அடையாளமாகிடும் அனைவரின் சொத்து.
நன்றி மிக்க நன்றி