வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வெகுமதியே....

வெகுமதியே—
மொழியெனும் படகே ஆசாமி
முதன்மைப்படுத்தும் அறிவாளி
இனமெனும் அடையாளப் பதிவாளி
ஒவ்வொரு வாழ்விலும் உறவாளி

வேற்றக முற்றத்து மல்லிகை நாம்
நாற்றென உயிர்த்தது நம்நிலத்தில்
நயம்பட வாழ்வோம் நற்றமிழில்
நலிவின்றிக் காப்போம் தாய்த்தமிழை

அகிலப் பரிதியின் ஒளிபோல
அன்னை மொழியே உயிர்நாடி
தரணி முழுதும் தமிழ் பரவி
தலை நிமிர்ந்து வாழும் தற்காலம்

தொழில்நுட்பத்திறனில் தொடர்பாடல்
தொலைவும் குன்றிடும் அருகாமை
இயல்பில் இயந்திரப் பயன்பாடு
இணையமே இன்றைய முதலீடு

வளத்தின் செழிப்பில் வலம்புரிபோல்
தரணியெங்கும் தமிழர் உலா
தனித்துவம் தாங்குது பண்பாடாய்
ஆதித்தமிழின் அத்தியாயம்
அரியணை காணும் வெகுமதியில்…
நன்றி