சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பெருமை…
தன்னலமற்று தக்காரை மதிப்பது
தகுந்திட்ட வாழ்வில் அறமாகி மிளிர்வது
உலகிடை உயர்வாகி உன்னதம் விளைவது
அழகிடை மலைகள் போல் நிமிர்விலே நிறைப்பது பெற்றோர் பேற்றில் பெருமை நிறைப்பது
வரமாய் கிட்டும் வலம்புரியே
பெருமை சேர் வாழ்வு பெரும்பேறே
பாடுகள் பலதின் அறுவடையாய்
பலரிடை கணிப்பின் நன்கொடையாய்
உயர்வில் ஒளிரும் விண்மீனாய்
பெருமையின் பேறுகள் பலவண்ணம்
பாத்திரமறிந்த கலை வண்ணம்.
நன்றி