வேலியடைப்போம்…
விடுதலை தாங்கிய உணர்விலே ஒன்றி
விதையற்ற சங்கதிகள் மனதிற்குள் தங்கி
புறமிடும் செயல்களே உலகிடை வங்கி
பூத்தே தான் குலுங்குது தமிழினம் மங்கி!
அரணிட்டு அறம்பேணி வாழ்ந்திட்ட முறை
அலங்கோலமானதே அகதியின் வாழ்வில்
புலமது பெயர்ந்திங்கு புதுக்கோலம் சூடி
வேலிகளற்றே வாழ்கின்றோம் வாடி!
கணினியின் யுகமென கடுகதி வாழ்வு
கணக்கற்ற இனத்தோடு பிணைப்புகள் கூடி
எல்லைகள் எதிலிட்டால் அரணாகும் வாழ்வு
எத்தனை முகமூடி எமக்குள்ளே கோடி
முள்வேலியிட்டாலும் முற்றாகத் தகரும்
மதில்வேலி போடினும் மறுப்பின்றி உடையும்
வேலியின் காப்பினை தாண்டியே பயிர்கள்
விளைந்து தான் விருட்சமாய் மாறுமே நாளை!
நன்றி மிக்கநன்றி