சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
காதலர்..
வென்றுயரும் வாழ்வு
வெற்றி முடிச்சின்
தொடுப்பு
விட்டாகலாப் பாசம்
வேதமென்னும் காதல்
தொட்டுயரும் வெற்றி
தொடருகின்ற முயற்சி
கற்றறியும் கல்வி
காத்து வளர்க்கும் பெற்றோர்
நட்பென்னும் வட்டம்
நாம் தொடரும் வாழ்வு
இருமனத்து வேராய்
ஒரிணைப்பாலம்
காதலென்னும் வரமே
காக்கும் சக்தி வடமே
காதலராய் பற்று
கனிவு நிறை போற்று.
நன்றி