சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பொங்கலோ பொங்கல்….
தைமகளின் வரவு
தரணியெங்கும் நிமிர்வு
வழிகாட்டும் தையாய்
வரும் எழிலின் மெய்யாய்
உழவன் நிலை உணர்த்தும்
உற்பத்தியை மதிக்கும்
உணவு வளம் பெருக்கும்
உணர்த்தி வலுப்படுத்தும்
அறுவடையின் செழிப்பில்
ஆதவனின் பங்கில்
அகிலமது நிறைக்கும்
பயரினத்துப் பயனே
பாரில் வாழும் உயிர்கள்
பசிபோக்கும் தென்பில்
படையலிட்டோம் பொங்கல்
பகலவனே நன்றி
பாரில் நீயே பரிதி
கூறும் நன்றி கோடி
யாதும் உனது கொடையே
பொங்கலிட்டும் பொங்கலோ பொங்கல்.
நன்றி மிக்க நன்றி