சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
வசந்தத்தில் ஓர்நாள்…

அகமெனும் ஊஞ்சலில் ஆடுமே நினைவு
அனுதினம் நாம் வாழும் அன்பெனும் மகிழ்வே

உறவாடும் உளமார்ந்த பாசத்தின் செறிவு
நினைவாகி நிதமாகும் வாழ்விலே வசந்தம்
இணைந்தோடும் நதிபோல இல்வாழ்க்கை இனிதே
அன்போடு அறனும் அணிகலனாகும் விருதே!
நன்றி