சந்தம் சிந்தும் கவிதை

வசந்தராணி சம்பந்தர்

09.01.24
கவி இலக்கம் 130
வசந்தத்தில் ஓர் நாள்

சந்தத்தில் வேர் சொந்தம்
பந்தத்தில் சீர் சிந்தும்
வசந்தத்தில் என் பேரோ
வசந்தராணியாகக்
குந்தும்

பாரினில் சுற்றி வரும்
இளவேனில் காலமதில்
சித்திரை வைகாசி சீதன சந்தோஷ சாதனை விஷாகம்

ஊர் கோடி ஒன்று சேர
பார் பாரெனக் கூடிட
செடி கொடி பூ பூத்துப்
பாவையரில் பின்னிடும்

கொழுத்தி எரியும் வெயில்
விழுத்தித் திரியும் சாயல்
குழுத்தி பரிமாறும்
கோயில்
வயிறாற உண்ட பெருநாள்
வசந்தத்தில் ஓர் நாள்.

வசந்தராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து