வியாழன் கவிதை

வசந்தமே வா வா

சக்தி சிறினிசங்கர்

வசந்தமே வா வா
எழுசீர் விருத்தம்
சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா

வசந்தமே வாவா வாழ்விலே சுகமே
வரமென வந்துதான் பாராய்
கசடுகள் இல்லா களங்கமும் இல்லா
கனிவுடன் வாழ்வுமே சிறக்க
அசதியைப் போக்கி அனுதினம் பாடி
அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க
பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு
பிறருடன் நட்புடன் வாழ்வோம்!