வியாழன் கவிதை

றாஜினி .அல்போன்ஸ்

கவிதை.337
25வது வருட நினைவுகள்
அன்று தொடங்கி இன்று வரை
நானும் சேர்ந்து பயனிக்கும் பாமுகமே
எத்தனை இடர்கள் வந்த போதும்
அனைத்தையும் ஏற்று நடாத்தும் பாமுகமே,
பெரியோர் இளையோர் சிறுவர் என்று
கொஞ்சும் குழந்தைகளோடு மாமா மாமியும்
பாமுகப் பந்தலில் பூத்துக் குலுங்கி
முடிவில்லாது தொடரும் இன்பப் பயணமிது,
அனைவரையும் அன்பால் ஒன்றாய்ச் சேர்த்து
இருபத்தைந்து வருடங்கள் கண்ட மகிழ்வில்
மீண்டும் மீண்டும் சிறப்புற்று ஒளிர
நானும் நல் மனதோடு வாழ்த்துகிறேன்.
றாஜினி.அல்போன்ஸ்
ஜேர்மனி