சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்மந்தர்

26.11.24
ஆக்கம் 168
உயிர்க் கொடை

சாவுக்கு சவால் காட்டியவன்
காவு கொள்ளும் உயிர்
அவாவை விடக் கூவித்
தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென
நிலை நாட்டியவன்

தமிழீழப் போராட்டமதில் தன்
பாத்திரம் அறிந்து
கூலிப்படையைச் சுட்டு
வீழ்த்திச் சரித்திரம்
கூட்டியவன்

விடியல் ஒன்றைத் தேடி
விடுதலை விடுவிக்க
உணவு, களைப்பு,
ஓய்வு இன்றி
வேங்கை போல் பாய்ந்து இறுதி மூச்சு வரை போராடிக் களம்
குதித்த மாவீரனே !

எத்தனை ஆற்றலில்
அத்தனை புதுமை
இத்தனையிலும்
உயிர்ப்போடு நாடிய
தீபச் சுடர்த் தியாகிகளே

கார்த்திகை 26 இல்
காத்திருந்து நினைவு
கூறி பாமாலை எனும்
பூமாலையிட்டு வணங்கும் உயிர்க்
கொடையாளிளே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து