சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

18.06 24
ஆக்கம் 151
வசந்தம்

வசந்தம் என்னோடு சொந்தம்
வாழ்ந்த பெயரோடு
பந்தம்
தாழ்ந்தும் உயர்ந்தும்
மகிழ்ந்த சந்தம் சிந்தும்
நாளாந்தம்

அந்த நாள் தேடிய சம்பந்தம்
சந்ததி சூடிய ஒப்பந்தம்
காத்திருந்த காதல் நாடிய ஜிவானந்தம்
பார்த்திருந்து கை கூடிய
இரட்டிப்பு ஆனந்தம்

சுகராகம் கேட்கும் தினந்தினம்
புகுராகம் வெள்ளம் போல் பூங்கவிதை
பூக்கும் சீரானந்தம்

சிந்தும் வழி விழியில்
மன்னவன் மாலையிட
புகுந்த பொன்னாளில்
வசந்தம் பகிர்ந்ததும்
எந்நாளும் பேரானந்தம்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து