28.01.25
ஆக்கம் 174
கவி அழகு
எழுத எழுத எழுதிடத்
தூண்டும் இனிமையில்
உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில்
தோன்றிடும் பிரமிப்பு
வழியும் மனதில்
விழியின் உணர்வில்
மாறி மாறித் தூண்டலிடும் பொய்யும்
மெய்யும் கரைந்து நின்றிடும் வர்ணிப்பு
மறைந்து தேயும் மாபெரும் கனவுப்
பெட்டகங்களில்
உயிர் கொடுக்கும்
பேனா முனை
தாளில் பரிதவிப்பு
பரந்து விரிந்த பல
வர்ணக் காட்சி
உருவாக உறைந்து
கருவாக வளர்ந்து
உவமை ஒப்பீடு , எதிர்முனையில்
கை கால் முளைத்து
விரைந்து பிறந்திடும்
பிரசவிப்பில் கவி அழகு