சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

14.01.25
ஆக்கம் 173
சிறுமை கண்டு பொங்குவாய்

பெருமை கொண்டு
தூங்கியது
சிறுமை கண்டு
பொங்கியது
இனிமைக் கூண்டு
நசுங்கியது
உரிமைத் துண்டு
பொசுங்கியது

நுண்மை நின்று
தங்கியது
தின்மை கொன்று
தொங்கியது
மகிமை நிஜங்கள்
மங்கியது
பசுமை உணர்வு
மொங்கியது

நிலைமை தாய் மண்ணில் புழுங்கியது
தனிமை அகதி மண்ணில் விழுங்கியது
அடிமை அற்பத்தனம்
குலுங்கியது

நோய்மை பெருகுண்டு
வேலை இன்மை
முழங்கிய வறுமை
நீண்ட சீற்றமே
சிறுமை கண்டு பொங்குவாய்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து