சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

07.01.25
ஆக்கம் 172
பூக்கும் புத்தாண்டு

ஏக்கமோடு ஏக்கம் காத்திருக்கப் பூக்க
இருக்கும் புத்தாண்டே
நீ வருக நீ வருக வருக

பல் நோக்கம் பெருக்கி
தீய தேக்கம் நொறுக்கி
மாந்தர் போக்கு மாற்றிடப் புத்துயிர்
தருக தருக தருக

மனிதரை மனிதர்
கசக்கிப் பிழியும்
இன் வெறி மொழி
அழிக்கும் அசுர குணம்
ஒழித்துத் தீர்வு பெறுக
பெறுக பெறுக

எழுச்சிகள் எழுப்பி
வீழ்ச்சிகள் வீழ்த்தி
முழுமூச்சாய் மனித-
நேயப் பண்பில்

அன்பு, கருணை பரந்து
ஊக்கமெனும் சிறகு
விரித்திடப் பூக்கும் புத்தாண்டே நல் ஒளி
தந்திட வந்திடுக
வந்திடுக வந்திடுக .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து