17.12.24
ஆக்கம் 171
இதயம்
காதலின் பிறப்பிடம்
மோதலின் முறைப்பிடம்
சாதலின் நிரப்பிடம்
இன்ப துன்ப சேர்தலில்
தரிப்பிடம்
அது எதுவோ உடலிது
காவிடும் உயிரின்
துடிப்பிடம்
கல்லுப் பிள்ளையார்
போலில்லாது அல்லும்
பகலும் ஓய்வின்றியே
டொக், டொக்கெனத்
திக்கு முக்காடி விழித்திடும் இதயம்
அன்பு, கருணை, உணர்வின் வசிப்பிடமே
கொதி, கோபம் சுமக்கும் பொறுமை
கருவிடமே
பிரிய மனமிலாது
உயிர் ஊசலாடும்
தறுவாயிலும் ஆடி
அடங்கித் துடியாய்த்
துடித்திடும் துணிவான
இருதய இதயம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து