10.12.24
ஆக்கம் 170
ஈரம்
அருளும் அடிவானம்
அதிகாலை விடியப்
போகுதென கூவிடும்
கொண்டைச் சேவலில்
தெரியும் ஈரம்
மருளும் கண்ணில்
உச்சி வெயில் கணிக்கும் நேரம்
என்னவென்று மண்ணில் ஏர் உழுதிடும் விவசாயியில் புரியும்
ஈரம்
திரளும் கருமேகம்
விண்ணில் கண்டு
மழை சொரியுமென
ஆனந்த நன்றியுடன்
தோகை விரித்தாடும்
மயிலின் ஈரம்
ஈரம் பெற்ற வற்றிய
குளங்கள் நீர் நிறைய
வெள்ளைச் சேலை
உடுத்தி ஒற்றைக் காலில் நின்று ஈரத்
தலையுடன் வெள்ளைக்
கொக்கும் நடனமாடுமே