சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

19.11.24
ஆக்கம் 167
மாற்றம்

முற்று முழுதாய் வெற்றி
பெற்ற வரலாற்றுச் சாதனை

கற்றுத் தந்த பாடம்
இற்று வரை வேதனை
என சுற்று முற்றும் முழங்கி நாற்று நட்ட
மேடை நாயகன் சந்தை
ஏற்றிய சிந்தனை

சேற்றில் புதைந்த
பாராளுமன்ற
சோதனையை மாற்று
மாற்று என ஊரெங்கும்
ஊதிய பஜனை

சொந்தப் பிரச்சினை
தீரணுமென ஒரே
பிதற்றலில் சற்றும்
சிந்தியாது வாக்களித்த போதனை

மாற்றம் ஒன்று வேண்டும் என்று
சீற்றம் கொண்ட
சிறுபான்மை, பெரும்
பான்மை மொத்த மாந்தர் குத்திய
வாக்கினால் அனுரா
கட்சி வெற்றி பெற்றதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து