08.10 .24
ஆக்கம் 161
அதிரடி
ஆடிய ஆட்டம்
ஓடிய ஓட்டம்
பாடிய கூட்டம்
வாடி வதங்கிய
பேரிடி சப்பலடி
அடாவடியாய்த் தேடிய
பல கோடித் தேட்டம்
புது ஜனாதிபதி
துவங்கிய நொடிக்கு நொடி அதிரடியில் புதிரடி
சூடிய அமைச்சர் பதவி
சொகுசு வாகனம்,
சொத்து ஆவணம்
பறிமுதலில் தொங்கிய
தலையிடி
குதிருக்குள் புதிர் போடும் அதிர்வுக்குள்
விடை தேடும் மாந்தர்
அதிரடி அதிபர் தமிழன்
தலையில் மிளகாய்
அரைக்கும் எடுபிடிக்கு
நெற்றியடியா?