சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

01.10.24
ஆக்கம் 161
வெற்றிப் பயணம்

வெற்றிப் பயணமதில்
தொற்றிய கொரோனா
பற்றிய கொடிய நோயால் வெறிச்-
சோடியது

குற்றிய தடுப்பூசியதில்
வேற்றுருவாய் மாற்றம்
பெற்றுத் தாறுமாறாய்
ஒழிந்து ஓடியது

பயம் மாறியதில் பயணம் மீண்டும் மீண்டும் தரையில்
நகர்ந்தும், வானில்
பறந்தும் வருவாய்
தேடியது

வேற்று நாடுகளின்
வெற்றிப் பயணமதில்
கற்றுத் தந்த புதுப் புது
அனுபவம், கலாச்சாரம்
முற்றிலும் பரிமாறிட
மனம் நிறைவாய்
மாலை சூடியதே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து