24.09.24
ஆக்கம் 160
விடியுமா தேசம்
காலங்கள் ஓடியது
கவலைகள் கூடியது
உருக்குலைந்து வாடிய
மனமோ மூடிய வாசல்
எப்போது திறக்குமென
அன்றிலிருந்து இன்றுவரை விடியலைத் தேடியது
ஒரு பிடியாவது கிடைக்க விடியலைத்
தேடிய மண்ணின் மைந்தர் நேர்மையாய்
போராடியும் நய
வஞ்சரால் முடிந்தது
உலகறிந்த உண்மையே
ஆங்கிலேயர் செய்த
தவறு தமிழனை
இன்றும் கலங்க
வைக்கிறதே
தொடர்ந்திடும் கண்ணீர் பதிவில்
நடந்து முடிந்த தேர்தலிலாவது
மோசஞ் செய்த
அனுபவ சதியை
வீழ்த்தி வென்ற
புது அதிபரிலாவது
விடியுமா தேசம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து