சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

17.09.24
ஆக்கம் 159
தேர்தல்

வாக்குறுதி மேடையில்
சோக்காக ஆளுக்கு ஆள் அள்ளி வீசி சொக்குப்பொடி
தள்ளிடும் வேட்பாளர்
வெறித்தனம்

பக்குப் பக்கென முக்கித் தவிக்க மூச்சு
அடைக்கும் பட்டியல்
முட்டி மோத புக்குப்
புக்கென புகையோடு
வண்டி ஏறும் பிக்குவின்
சொறித்தனம்

தமிழர் தீர்வே தீர்மானம்
முழங்கியே வீட்டுக்கு வீடு ஆளிற்குஒரு வோட்டு எமக்கே
எனப் போட்டு வாங்கும்
சஜித்தின் இராஜ்யத்தனம்

நரித்திட்டம் தீட்டி
நடுத்தெருவில் நாட்டிய
தீவட்டியோ வரிச் சுமை
குறைக்கும் தந்திர
வாக்குறுதியின் கதிரை
முறியுதோ அல்லது
சிலிண்டர் வெடிக்குதோ
பொறுத்திருப்போமே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து