சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

27.08.24
ஆக்கம் 157
பருவம்
பாதைகள் நீண்டு
போதை கூடுது
பயணம் தோன்றி
வேறு பாதை நாடுது
போகும் விழியில்
வாழ்வுப் பருவமதில்
சாகும் வழி தொடருது

பள்ளிப் பருவம்
ஆரம்பம் ஆகுது
துள்ளிய உருவம்
பாடம் படித்து
அள்ளி வளருது

நுள்ளிய உணர்வு
பதினாறில் தூக்கம்
இன்றிக் கொள்ளி
போடத் தொடங்குது

பருவம் பொல்லாதது
பார்த்து நடக்கத்
தெரியாதது
போராடும் மனதில்
நல்லது சிந்தியாது
கேடு கெட்டது புகுந்து
அடிமைப் பசியில்
திசை மாறி உருக்-
குலையுது பாழாய்ப்
போன பருவம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து