சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

௦6.08.24
ஆக்கம் 156
அர்ச்சுனா
இது இன்றைய ஏக்கம்
அது அன்றைய தாக்கம்
எதுவுமின்றிய கலக்கம்
தஞ்சம் தந்த கொஞ்சக்
காசு புதுமனை ஆக்கம்

பந்தம் தொடர அண்ணா
தம்பி அந்நிய நாடு வர
உதவிய ஊக்கம்
எந்த நன்மை செய்து
விடினும் அந்த மாந்தர்
விட்ட பாடில்லாத துக்கம்

எக்கச்சக்க செலவாம்
நோய் விட்டுப் போக
வாய்விட்டுக் கிளறி
வெளிநாடெனத் தெரிய
தனியார் மருத்துவ-
மனையில் இலட்ச
இலட்ச நோட்டுக்கு
வேட்டு

அகதிக்கோ அறுபதுக்கு
மேலே, திகதி தெரியாது
படுத்த படுக்கையில்
தீராத வேதனையோடு
அர்ச்சுனா அர்ச்சுனா எனச் சொல்லியபடி
திடிரெனப் போனது
உயிர் மூச்சு.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து